ADDED : ஏப் 30, 2024 05:13 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்,: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த புலவனுார் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் 22, இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மது குடித்துவிட்டு, மடுகரை சடகோல் பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசி, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
