ADDED : செப் 13, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் ஆத்து வாய்க்கால்பேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரத், 19. இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் மது அருந்துவிட்டு, ஆத்துவாய்கால்பேட் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த வில்லியனுார் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.