/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருவிழா முடிந்தது! பேனர் அகற்றுவது என்னாச்சு?
/
கோவில் திருவிழா முடிந்தது! பேனர் அகற்றுவது என்னாச்சு?
கோவில் திருவிழா முடிந்தது! பேனர் அகற்றுவது என்னாச்சு?
கோவில் திருவிழா முடிந்தது! பேனர் அகற்றுவது என்னாச்சு?
ADDED : ஜூலை 23, 2024 02:33 AM
அரியாங்குப்பம் : நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா முடிந்தும் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது.
நைனார்மண்டபத் தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த செடல் திருவிழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சினர், தங்கள் கட்சி தலைவர்களை யும், எம்.எல்.ஏ.,க்களை யும் வரவேற்று, மரப் பாலத்தில் துவங்கி முருங் கப்பாக்கம் வரை வரிசையாக 50க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்திருந்தனர்.
பேனர்களை அகற்ற சென்ற அரசு அதிகாரி களை, சம்பத் எம்.எல்.ஏ., தடுத்து நிறுத்தி, விழா முடிந்ததும் பேனர்களை அகற்றுவதாக உறுதி அளித்தார்.
இதனால், பேனர்கள் அகற்றாமல் சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் திரும்பினர்.
கோவிலின் பிரதான திருவிழாவான செடல் திருவிழா, கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது.
விழா முடிந்தும் இன் னும் பல இடங்களில் பேனர்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.
வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை இனியாவது அகற்றுவதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.