/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு
/
அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு
ADDED : ஏப் 08, 2024 05:18 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கோவில் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தாலி திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெட்டப்பாக்கத்தில் பர்வத வர்த்தினி சமே ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பிரதோஷ வழிபாடு முடிந்து, பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோவிலை திறந்து வைத்துவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார்.
பின் காலை 6:30 மணிக்கு வந்து பார்த்தபோது கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தாலி சரடு, 2 குண்டு மணி ஆகியவை திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் மதிப்பு ரூ. 55 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து கோவில் சிறப்பு அதிகாரி முருகன் அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து, அம்மன் தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

