/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பக்தர்கள் சென்ற வேன் மின்கம்பத்தில் மோதி விபத்து
/
பக்தர்கள் சென்ற வேன் மின்கம்பத்தில் மோதி விபத்து
ADDED : செப் 03, 2024 06:28 AM

பாகூர் : பாகூரில் பக்தர்கள் சென்ற வேன் மின் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூரிலிருந்து 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று காலை மேல்மலையனுார் கோயிலுக்கு செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை வில்லியனுாரை சேர்ந்த ஆகாஷ் 24; ஓட்டிச் சென்றார்.
பாகூர் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து புறப்பட்டு 200 மீட்டர் துாரம் சென்ற நிலையில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த மின் கம்பங்கள், மரம் மற்றும் காரில் அடுத்தடுத்து மோதி நின்றது.
இந்த விபத்தில் ஒரு மின்கம்பம் உடைந்தது சேதமானது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த பக்தர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில், வேன் டிரைவர் ஆகாஷ், ஏற்கனவே ஒரு சவாரிக்கு சென்று விட்டு ஓய்வில்லாமல் மீண்டும் அதிகாலை பாகூரில் இருந்து மேல்மலையனூருக்கு பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற போது, துாக்க கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் பாகூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.