ADDED : ஏப் 05, 2024 05:26 AM
பாகூர்: கருவாட்டு குழம்பு சாப்பாடு சாப்பிட்ட கூலிதொழிலாளிமூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த கடுவனுார் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் 64; கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி, 52. இவர்களுக்கு முத்துக்குமரன் 23, என்ற மகனும், சரளா 20, என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மாணிக்கம் கருவாட்டு குழம்பு சாப்பாடு சாப்பிட்டார். திடீரென அவருக்கு புரை ஏறி உள்ளது. இதனால், மாணிக்கம் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர், அவரது முதுகில்தட்டி சரி செய்ய முயன்றனர்.அதற்குள் அவர் மயங்கி விழுந்தார்.உடனே, அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில், கரையாம்புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

