ADDED : மே 06, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் வரும் 9ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு காலை சிறப்பு அபிேஷகம், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு அர்ஜூனன் – திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நாளை மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 9ம் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
