/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூப்பர் மார்க்கெட்டில் பணம், பொருட்கள் திருட்டு
/
சூப்பர் மார்க்கெட்டில் பணம், பொருட்கள் திருட்டு
ADDED : ஜூலை 04, 2024 03:21 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் சூப்பர் மார்க்கெட்டில், ரூ. 5 ஆயிரம் பணம் மற்றும் 55 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பெரியார் நகரில், சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. சூப்பர் மார்க்கெட் மேனேஜர் ஆரோக்கியதாஸ், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை வந்தபோது, கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து, ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.