/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : மே 23, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று முதல் தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் காலை திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடந்தது. நேற்று காலை ராமலிங்கேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை தெப்ப உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

