/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் தங்கும் விடுதிக்கு மின் இணைப்பு கொடுக்க எதிர்ப்பு சின்னக்காலாப்பட்டு அருகே பரபரப்பு

ADDED : மே 28, 2024 04:59 AM

புதுச்சேரி : தனியார் தங்கும் விடுதிக்கு மின் இணைப்பு கொடுக்க பள்ளம் தோண்டியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியை அடுத்த சின்னகாலாப்பட்டு ஆலமரத்தெருவில் தனியார் தங்கும்விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதிக்கு புதிய மின்சார இணைப்பு கொடுப்பதற்காக நேற்று காலை 8 மணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.அதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து தனியார் விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி மக்களை சமாதானப்படுத்தினர். மின் துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி, இவ்விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என காலாப்பட்டு போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து காலை 11 மணியளவில் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.