/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது வழியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்து அகற்றியதால் பரபரப்பு
/
பொது வழியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்து அகற்றியதால் பரபரப்பு
பொது வழியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்து அகற்றியதால் பரபரப்பு
பொது வழியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்து அகற்றியதால் பரபரப்பு
ADDED : மே 31, 2024 02:25 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் பொது வழியை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்து அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
அரியாங்குப்பம் அடுத்த ஓடைவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் அந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் ராமகந்தா. இவரது மனைவி சரசா. இரு குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்னை உள்ளது.
விஜயலட்சுமி பொது வழியில் ஆக்கிரமித்து வீட்டை கட்டியதாகவும், அந்த வழியாக தனது இடத்திற்கு செல்ல முடியாமல் இருந்ததால், ஆக்கிரமித்து கட்டடிய வீட்டை இடிக்கக் கோரி, கடந்த 2022ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் சரசா வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை முடிந்து, கோர்ட், கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க உத்தரவிட்டது. அதையடுத்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், கடந்த மார்ச் 21ம் தேதி வீட்டை காலி செய்ய வீட்டின் உரியைாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கால அவகாசம் கொடுத்தும், வீட்டை காலி செய்யாமல் இருந்ததால், துணை கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, வீட்டை இடிக்க முடிவு செய்தனர். அதையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டை இடிக்க தாசில்தார், பிர்திவ், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், மின்துறை இளநிலை பொறியாளர் லுார்துராஜ் முன்னிலையில் கொம்யூன் ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வீட்டை இடித்து அகற்றினர்.
அப்போது, வீட்டு உரிமையாளருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.