/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.டி.எம்., மிஷினில் தானாக பணம் வந்ததால் பரபரப்பு
/
ஏ.டி.எம்., மிஷினில் தானாக பணம் வந்ததால் பரபரப்பு
ADDED : ஆக 13, 2024 05:14 AM
புதுச்சேரி: ஏ.டி.எம்., மிஷினில் இருந்து தானாக பணம் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி காந்தி வீதி அருகே எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மிஷின் உள்ளது. நேற்று காலை ஒருவர் அந்த ஏ.டி.எம்.,க்கு பணம் எடுக்க சென்றார். தனது ஏ.டி.எம்., கார்டை, மிஷினில் சுவிப் செய்து, பாஸ்வேர்டை போடும் போது, மிஷினில் இருந்து தொடர்ந்து பணம் தானாக வந்தது.
அதிர்ச்சிடைந்த அவர், எஸ்.பி.ஐ., வங்கிக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரி பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் ஏ.டி.எம்., கதவை மூடினர். பின்னர் வங்கி அதிகாரிகள் வந்து பார்க்கும் போது, ஏ.டி.எம்., மிஷின் பழுதாகி பணம் தானாக வந்தது தெரியவந்தது. இந்த தகவல் அப்பகுதியில் பரவி மக்கள் குவிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

