/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க.,வினரை திட்டமிட்டு தோற்கடித்தனர்: அன்பழகன் 'திடுக்'
/
அ.தி.மு.க.,வினரை திட்டமிட்டு தோற்கடித்தனர்: அன்பழகன் 'திடுக்'
அ.தி.மு.க.,வினரை திட்டமிட்டு தோற்கடித்தனர்: அன்பழகன் 'திடுக்'
அ.தி.மு.க.,வினரை திட்டமிட்டு தோற்கடித்தனர்: அன்பழகன் 'திடுக்'
ADDED : மார் 28, 2024 04:26 AM
புதுச்சேரி : 'கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வினரை திட்டமிட்டு தோற்கடித்தனர்' என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம்,முதல்வராக பதவி வகித்தபோது, மத்திய அரசு கொடுத்த நிதியில் 60 சதவீதத்தை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியவர்.
பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சி, அ.தி.மு.க., போட்ட பிச்சை. அ.தி.மு.க., இன்றி வெற்றி பெற்று இருக்க முடியாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வினரை திட்டமிட்டு தோற்கடித்தனர்.
மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. மாநில அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு கூறுகிறது.
ரங்கசாமி மாநில அந்தஸ்து வேண்டும் என கூறுவது சந்தர்ப்பவாத கூட்டணி.
அரசு சார்பு நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்டவைகளை கொள்ளையடித்து நஷ்டம் ஏற்படுத்தி மூடி விட்டனர். தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 3 தொகுதியில் மட்டும் 15 ஆண்டுகளில், 10 ஆயிரம் பேர் அரசு பணிக்கு சென்றுள்ளனர். ஆட்சி கையில் இருப்பதால், பணிக்கு செல்கின்றனர்.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு அ.தி.மு.க., வருவதற்கு முன்னோட்டமாக, இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பேசினார்.