/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கடலுார், விழுப்புரத்தில் வரும் 30ம் தேதி நடக்கின்றது
/
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கடலுார், விழுப்புரத்தில் வரும் 30ம் தேதி நடக்கின்றது
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கடலுார், விழுப்புரத்தில் வரும் 30ம் தேதி நடக்கின்றது
'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கடலுார், விழுப்புரத்தில் வரும் 30ம் தேதி நடக்கின்றது
ADDED : ஜூன் 25, 2024 06:21 AM
புதுச்சேரி : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி 'தினமலர்' நாளிதழ் சார்பில் கடலுார், விழுப்புரத்தில் வரும் 30ம் தேதி நடக்கின்றது.
அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து 'தினமலர்' நாளிதழ் வழிகாட்ட உள்ளது.
இதற்காக சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து 'தினமலர்' நாளிதழ் சார்பில் டி.என்.இ.ஏ., இன்னிஜியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி-2024 என்ற நிகழ்ச்சியை, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட உள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி வரும் 30ம் தேதி கடலுார், விழுப்புரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லுாரியில் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் நடக்கின்றது.
இதில் தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருேஷாத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க உள்ளனர்.
ஆன்லைன் கவுன்சிலிங்கின் விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்ப பாடப் பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாட பிரிவுகள் போன்றவை குறித்த சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்.
இந்தாண்டு எந்த படிப்பிற்கு மவுசு அதிகம், என்ன படிப்பிற்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு உள்ள வாய்ப்புகள், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் வழிமுறைகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் மாணவர்கள், பெற்றோர் விடை தேடலாம்.
முன்பதிவு
அனுமதி இலவசம். இந்த 'கியூ. ஆர்' கோடினை மொபைல் போனில் ஸ்கேன் செய்து தங்கள் பெயர், மொபைல் எண், முகவரியுடன் முன் பதிவு செய்யலாம்.