தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர்' வழிகாட்டி: புதுச்சேரியில் நாளை துவங்கி 3 நாட்கள் நடக்கிறது : அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை சந்தேகங்களுக்கு தீர்வு

'தினமலர்' வழிகாட்டி: புதுச்சேரியில் நாளை துவங்கி 3 நாட்கள் நடக்கிறது : அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை சந்தேகங்களுக்கு தீர்வு

'தினமலர்' வழிகாட்டி: புதுச்சேரியில் நாளை துவங்கி 3 நாட்கள் நடக்கிறது : அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை சந்தேகங்களுக்கு தீர்வு


ADDED : மார் 28, 2024 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரி சித்தன்குடியில் பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நாளை 29ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெற உள்ளன. அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் பெறலாம்.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வித் திருவிழாவில், கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

அட்மிஷன் நடைமுறை


இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடப்பது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் எவை? வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை? என்பது குறித்து விளக்கப்படும். உதவித்தொகை வாய்ப்புகள் எப்படி என்பது உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிபுணர்கள் ஆலோசனை


சிவில் சர்வீசஸ், கலை அறிவியல், சட்டம், மருத்துவம், இன்ஜினியரிங், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மிஷன் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி' என அனைத்து துறைகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.

மெட்டாவர்ஸ், டேட்டா சயின்ஸ், ஏ.ஆர்., வி.ஆர்., அறிவியல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் - ஆப் வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் வாழ்வில் சாதிக்க வழிகாட்டல் கிடைக்கும்.

நுழைவுத் தேர்வு வழிமுறை


மேலும், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்'போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும், புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை குறித்தும் விளக்கப்படும்.

அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - ஐ.சி.டி., எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., - ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அரங்கங்கள்


நிகழ்ச்சியில் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை, கட்டடக்கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உட்பட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 50க்கும் மேற்பட்ட 'ஸ்டால்'கள் இடம் பெறுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.

இணைந்து வழங்குவோர்


நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பவர்டு பையாக கரம் கோர்த்து வழங்குகின்றன. கோ-பான்சர் - ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி களம் இறங்கியுள்ளது. மேலும் வழிகாட்டி நிகழ்ச்சியை ருசி பால் நிறுவனம், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியோ, அக்குவாகிரீன் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

உடனே பதிவு செய்யுங்கள்

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க www.kalvimalar.com என்ற இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்கள்.இதேபோல் HI என்று 9150574442 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் அனுப்பி பங்கேற்க பதிவு செய்யலாம்.



முதல் நாள் அமர்வில் என்ன படிப்பு

'தினமலர்' வழிகாட்டியின் முதல் நாளான 29 ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடக்கும் அமர்வில் எதிர்கால பொறியியல் படிப்புகள் குறித்து ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் பேராசிரியர் பென்ரூபன், விண்வெளி அறிவியல் படிப்புகள் குறித்து இஸ்ரோவை சேர்ந்த ராஜராஜன், சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.எஸ்., படிப்புகள் குறித்து ஆடிட்டர் சேகர் விளக்கம் அளிக்கின்றனர்.மாலை 3:00 முதல் 5: 30 மணி வரை நடக்கும் அமர்வில் விஞ்ஞானியாக மாறுவது எப்படி என டி.ஆர்.டி.ஏ., அதிகாரி டில்லிபாபு, மரைன் கேட்டரிங், ஓட்டல் மேலாண்மை படிப்புகள் குறித்து சுரேஷ்குமார், கேரியர் கவுன்சிலிங் குறித்து அஸ்வின் ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர்.



ரோபோக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

ஜெர்மன் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான குக்கா, தொழில்துறை ரோபோக்களுக்கு பெயர் பெற்றவையாக உள்ளன. அவை உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளன. ஆனால் குக்கா ரோபோக்கள் தொழிற்சாலைத் தளத்தைத் தாண்டி, ஓவியம் வரைதல், செஸ் விளையாடுதல் மற்றும் விசைப்பலகை இசை விளையாடுதல் என பல்துறை திறமையை நாம் அசந்துபோகும் அளவிற்கு அசத்தலாக காட்டுகின்றன. இயந்திர உலகில் செயற்கை நுண்ணணிவு பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் மேம்படுத்தப்பட்ட ரோபோக்களை புரிந்து கொள்ள அரிய வாய்ப்பினை 'தினமலர்' நாளிதழ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மிஸ் பண்ணமா வந்துடுங்க.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us