தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : செப் 14, 2024 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் 5ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நாளை (15ம் தேதி) நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 5ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நாளை (15ம் தேதி) நடக்கிறது.

இதையொட்டி, அன்று காலை 8:00 மணிக்கு திருமஞ்சன சேவை, விஷ்வக்சேன ஆராதனம், மகா சுதர்ஷண ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சர்வபூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us