ADDED : ஜூன் 26, 2026 08:50 PM
பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், இனியவை கூறல் திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம் நடந்தது.
நலப்பணிச் சங்கத்தின் தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர் பவித்ரா வரவேற்றார். நிறுவனர் செல்வி, வரலாற்று விரிவுரையாளர் முத்துஐயாசாமி, ஆசிரியர் தனராஜா, துணைத் தலைவர்கள் கணபதி, முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்தாளுநர் கல்லுாரி மாணவி இசைமொழி, பயிற்சி ஆசிரியர் குழலி நோக்கவுரையாற்றினர்.
கொல்லிமலை வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகி கணேசன், தலைமையாசிரியர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாணவிகள் செல்வி, சந்தியா, சரினா, சாதனா, காவியா ஆகியோர் திருக்குறளில் இனியவை கூறல் குறித்தும், மாணவிகள் பூஜா, பத்மஶ்ரீ, ஹேமளா, சுடர்தேவி, போனிஷா ஆகியோர் வாழ்வியலில் இனியவை கூறல் குறித்தும் பேசினர். பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்குள் பரிசுகள் வழங்கப்பட்டன. மண்டல அமைப்பாளர்கள் கிருத்திகா சோபியா நன்றி கூறினர்.
