/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் திருட்டு வழக்கில் மூன்று பேர் கைது
/
பைக் திருட்டு வழக்கில் மூன்று பேர் கைது
ADDED : ஆக 19, 2024 05:14 AM
புதுச்சேரி,: பைக் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார், உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம், 45. இவர், வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் தனது பைக்கை கம்பெனியில் நிறுத்தி விட்டு சென்றார். வேலையை முடித்து விட்டு வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
பைக் காணாமல் போனதை பற்றி அபிேஷகப்பாக்கத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரிடம் கூறியிருந்தார். அவர் திருக்காஞ்சி வழியாக சென்ற போது, சாராயக்கடை ஒன்றில் அந்த பைக் நின்றிருப்பதை பார்த்து திருஞானசம்பந்தத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதுபற்றி, அவர், வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தை அடுத்து, அந்த பைக்கை வைத்திருந்த நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், திருக்காஞ்சி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி,26; ஏழுமலை, 26, என்பதும், அவர்கள் ஒதியம்பட்டு நரிக்குறவர் காலனி சேர்ந்த அசோக், 30, என்பவரிடம் திருட்டு பைக்கை வாங்கியதும் தெரியவந்தது. அதையடுத்து, சத்திமூர்த்தி, உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.