/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தறிகெட்டு ஓடிய மினி வேன் மோதி மூன்று கார்கள், பைக் சேதம்
/
தறிகெட்டு ஓடிய மினி வேன் மோதி மூன்று கார்கள், பைக் சேதம்
தறிகெட்டு ஓடிய மினி வேன் மோதி மூன்று கார்கள், பைக் சேதம்
தறிகெட்டு ஓடிய மினி வேன் மோதி மூன்று கார்கள், பைக் சேதம்
ADDED : ஜூலை 08, 2024 04:29 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் தறிகெட்டு ஓடிய மினி வேன் மோதியதில் மூன்று கார்கள், பைக் சேதமடைந்தன.
புதுச்சேரியிலிருந்து வில்லியனுார் நோக்கி, நேற்று இரவு 11.00 மணியளவில் மினி வேன் ஒன்று சென்றது. விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தாறுமாறாக ஓடியது.
அதில், சாலையில் முன்னால் சென்ற 3 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி, சாலை தடுப்புசுவரில் மோதி நின்றது. உடன், மினி வேன் டிரைவர் தப்பியோடி விட்டார். இந்த விபத்தில் 3 கார்களும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக கார்களில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து ஏற்படுத்திய மினிவேனின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. விபத்து குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கோரிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.