
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாகூர் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில், ராமநாதன் 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 21 குளங்கள் மக்களுக்கு அர்பணிப்பு, டாக்டர் கலாம் இணையவழி கல்வி வகுப்பு பயிற்சி மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துார்வாரிய குளங்களை மக்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.
அனைத்து குளங்களின் பெயர்களையும் அந்தந்த குளத்தில் பதாகைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.பின் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
தனியார் நிறுவன மேலாளர் பிரபு, அரவிந்த சொசைட்டி வினோத்குமார், அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.