/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த மூன்று பேர் கைது
/
கத்தியுடன் திரிந்த மூன்று பேர் கைது
ADDED : மார் 02, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கத்தியுடன் திரிந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டைசப் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோவில் வளாக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசாரை கண்டதும் மூன்று வாலிபர்கள் தப்பியோடினர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது, முத்தியால்பேட்டை கிருஷ்ணகுமார், 28; குயவர்பாளையம் சுரேஷ், 33; தவளக்குப்பம் ஆனந்தராமன், 24; என்பதும், கையில் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து கிருஷ்ணகுமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.