/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிரசார வாகனம் மீது கல் வீச்சா?
/
முதல்வர் பிரசார வாகனம் மீது கல் வீச்சா?
ADDED : ஏப் 01, 2024 06:35 AM
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் முதல்வர் பிரசார வாகனத்தின் மீது கல் விழுந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தே.ஜ., கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் முத்தியால்பேட்டையில் நேற்று மாலை நடந்தது.
முதல்வர் ரங்கசாமி, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் செய்தார். முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் துவங்கிய பிரசாரம், இரவு 8:00 மணிக்கு, மந்தைவெளி மாரியம்மன் கோவில் அருகே நடந்தது.
அப்போது, மாடியில் இருந்து ஒரு சிறிய கல் பிரசார வாகனம் மீது விழுந்தது. இதனை கவனித்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், தங்களிடம் உள்ள டார்ச் லைட் மூலம் மாடிகளில் யாரேனும் பதுங்கி உள்ளார்களா என பார்த்தனர்.
அப்போது யாரும் அங்கு சிக்கவில்லை. மாடியில் நின்றிருந்தவர்களிடம் விசாரிக்க தெரிவித்துவிட்டு சென்றனர்.
முத்தியால்பேட்டை போலீசார் கூறுகையில்; மாடியில் இருந்து பூக்கள் வீச தயாராக இருந்தனர். பூக்கள் வீச வேண்டாம் என தெரிவித்தோம். மீறி யாரேனும் பூக்கள் வீசுகிறார்களா என கண்காணித்தோம். கற்கள் ஏதும் வாகனம் மீது விழவில்லை என தெரிவித்தனர்.

