/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது
/
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED : மார் 04, 2025 04:27 AM
வில்லியனுார்: திருக்காஞ்சியில், வரும் 12ம் தேதி நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி திருவிழா, நேற்று கொடியெற்றத்துடன் துவங்கியது.
வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி விழா நேற்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில், முக்கிய நிகழ்வாக 6ம் தேதி மாலை பரிவேட்டை, 8ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 10ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், 11ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
தேர் திருவிழாவை, அன்று காலை 8:30 மணிக்கு, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை செயலர் நெடுஞ்செழியன், ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
முக்கிய விழாவாக, வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சார்யார், கோவில் நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.