/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுார் போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்
/
திருக்கனுார் போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 27, 2024 02:54 AM

திருக்கனுார்: திருக்கனுார் போலீசார் சார்பில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
புதுச்சேரி மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டி அறிவுறுத்தலின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் முன்னிலையில், திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே துவங்கிய போதைப்பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை சப் இன்ஸ்பெக்டர் பிரியா துவக்கி வைத்தார்.
இதில்,சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி தாளாளர் சம்பத், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, துரைக்கண்ணு மற்றும் போலீசார், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஊர்வலத்தில், திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பஜார் வீதி, வணிகர் வீதி, டி.வி.மலை ரோடுவழியாக சென்று போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் மற்றும் போலீசார்போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்றனர்.