/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமலை திருப்பதி தேவஸ்தான சீனிவாச திருக்கல்யாண உற்சவம் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் 30ம் தேதிஏற்பாடு

ADDED : ஜூன் 27, 2024 02:37 AM
புதுச்சேரி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் ஸ்ரீ வாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் புதுச்சேரி கிளை சார்பில், 6ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாண உற்சவம், வரும் 30ம் தேதி, லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில், மாலை 4:15 மணி முதல் இரவு 9:00 மணிக்குள் நடக்கிறது.
விழாவில் கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ், இணை செயலர்கள், தமிழ்நாடு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் புதுச்சேரி தலைவரான பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது;
சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்காக ஹெலிபேட் மைதானத்தில், 15,000 இருக்கைகள் போடப்படுகிறது. 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்காக ஹெலிபேட் மைதானத்திற்கும் புதிய பஸ் நிலையத்திற்கும் இடையே இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய நாள் 29ம் தேதி திருப்பதி உற்சவர், லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தர் பள்ளியில் எழுந்தருளுகிறார். மறுநாள் 30ம் தேதி பள்ளியின் சரஸ்வதி அரங்கில், காலை 10:00 மணிக்கு, உற்சவருக்கு சுப்ரபாத சேவை, தோமாலை சேவை நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை உற்சவரை பொதுமக்கள் தரிசிக்கலாம்.
திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்போருக்கு திருப்பதி சிறிய லட்டு, மாங்கல்யம், மஞ்சள், குங்குமம் பிரசாதமாகவழங்கப்பட உள்ளது' என்றார்.
பேட்டியின்போது, இணை தலைவர் செல்வகணபதி எம்.பி., செயலாளர் பாபுஜி, பொருளாளர் நவீன்பாலாஜி உடனிருந்தனர்.