தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மேம்பாட்டு பணிக்காக திருப்பதி ரயில் ரத்து

மேம்பாட்டு பணிக்காக திருப்பதி ரயில் ரத்து

மேம்பாட்டு பணிக்காக திருப்பதி ரயில் ரத்து


ADDED : ஏப் 28, 2024 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2024 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : தெற்கு மத்திய ரயில்வே துறையின் குண்டக்கல் கோட்டத்திற்குட்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதையொட்டி, 2 ரயில்களின் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு:

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மாலை 5:30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16870) வரும் மே 4ம் தேதி வரை காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மாலை 3:00 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16112) வரும் மே 4ம் தேதிவரை திருச்சானுாரில் நிறுத்தப்படுகிறது.

அதே போல், மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட வேண்டிய முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16111) இன்று 28ம் தேதி முதல் வரும் மே 5ம் தேதி வரை திருச்சானுாரில் இருந்து அதிகாலை 4:24 மணிக்கு புறப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us