தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடிப்படை பிரச்னைகளை தீர்க்க தி.மு.க. வேட்பாளரை ஆதரியுங்கள் மாநில அமைப்பாளர் சிவா பிரசாரம்

அடிப்படை பிரச்னைகளை தீர்க்க தி.மு.க. வேட்பாளரை ஆதரியுங்கள் மாநில அமைப்பாளர் சிவா பிரசாரம்

அடிப்படை பிரச்னைகளை தீர்க்க தி.மு.க. வேட்பாளரை ஆதரியுங்கள் மாநில அமைப்பாளர் சிவா பிரசாரம்


ADDED : செப் 24, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து, கவுண்டம்பாளையம் பகுதியில் மாநில அமைப்பாளர் சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று வீடு, வீடாக சென்று ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.

அப்போது மாநில அமைப்பாளர் சிவா கூறுகையில், ‘கவுண்டம்பாளையம், குண்டுபாளையம், சுப்பையா நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தெளிவான சிந்தனை உள்ளவர்கள். தொகுதியில் யார் ஜெயித்தால் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும் என்பது தெரியும். இப்பகுதி மக்களின் வரவேற்பை பார்த்தாலே நிச்சயம் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.

வேட்பாளர் சேதுசெல்வம் வெற்றி பெற்றால், பக்கத்து தொகுதிக்கு சென்று ரேஷன் பொருள் வாங்கும் அவலத்தைப் போக்கி, கவுண்டம்பாளையம் பகுதியில் ரேஷன் கடை அமைத்துதர நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் சிரமத்தை போக்கி பயன்பாடு இல்லாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும், சரியான கட்டமைப்புடன் கூடிய கழிவுநீர் வாய்க்கால், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.

எம்.எல்.ஏ.,க்கள் செந்தில், கவுதம், கண்டமங்கலம் சேர்மன் வாசு, பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சீத்தாராமன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் முகிலன், சுந்தர் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us