/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : ஜூன் 06, 2024 02:35 AM

புதுச்சேரி: கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சர்வதேச புகையிலை விழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், அரசு மார்பு நோய் நிலையம் மற்றும் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செவிலியர் தனலட்சுமி வரவேற்றார்.
செவிலிய அதிகாரிகள் வேல்விழி, பானுமதி மற்றும் லேப் டெக்னீசியன் அகல்யா முன்னிலை வகித்தனர்.
நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார்.
பெண் சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி, புகையிலை குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக்கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் செய்திருந்தார்.
ஆஷா ஊழியர்கள் ரேணுகா, விருதாம்பாள் ஆகியோர் புகையிலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
சுகாதார உதவி ஆய்வாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.