ADDED : ஜூலை 22, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார், மார்க்கெட் வீதியில் உள்ள தேவி ஏழை மாரியம்மன் கோவிலில் 96ம் ஆண்டு செடல் உற்சவம் விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவாக நாளை 23ம் தேதி மாலை செடல் உற்சவம் நடக்கிறது. தினசரி இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது.
இதையொட்டி, காலை சிறப்பு அபிேஷகம், 11: 00 மணிக்கு மேல் சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மேல் செடல் உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 25ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.