/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழலையர்களுக்கான பல் துலக்கும் தின விழா
/
மழலையர்களுக்கான பல் துலக்கும் தின விழா
ADDED : டிச 07, 2024 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளியில் முன் மழலையர்களுக்கான பல் துலக்கும் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியை சரோஜா வரவேற்றார். தலைமையாசிரியர் பாஸ்கர ராசு தலைமை தாங்கி, மாணவர்கள் வண்ணம் தீட்டுதல், பல் துலக்குதல் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரஷ், பேஸ்ட், கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஏஞ்சலின் ஜெயம், சுமதி, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை சிவமதி நன்றி கூறினார்.