/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 16, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கடலுார் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதன் மூலம் படகு குழாமிற்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
சனி, ஞாயிறு தொடர்ந்து, நாளை பக்ரீத் பண்டிகை விடுமுறை என, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரத் துவங்கியுள்ளனர். நேற்று கூட்டம் அதிகமாக இருந்தால், சுற்றுலாப் பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.