தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காற்றாடிகள் பறக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

காற்றாடிகள் பறக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

காற்றாடிகள் பறக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்


ADDED : ஆக 26, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2024 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஈடன் கடற்கரையில் காற்றாடி பறக்கவிடப்படாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

புதுச்சேரியில் உள்ள பாண்டி மெரினா, ஈடன் கடற்கரை, சென்ட் டூயு ஆகிய 3 கடற்கரை பகுதிகளில் வர்த்தகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ள சுற்றுலாத்துறை ஒப்பந்தம் அளித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் 3 கடற்கரையிலும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் 3 நாள் சர்வதேச காற்றாடி திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது.

தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த பட்டம் விடும் நபர்கள் பங்கேற்றனர். மீன், ஆமை, ஆக்டோபஸ், திமிங்கலம், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவில் ராட்சத காற்றாடிகள் வானில் பறக்கவிடப்பட்டது.

இதனை காண ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இரு நாட்கள் காற்றாடி திருவிழா சிறப்பாக நடந்தது. 3ம் நாளான நேற்று விடுமுறை நாள் என்பதால் சுமார் 1,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் சின்ன வீராம்பட்டினத்தில் குவிந்தனர். இதனால் வீராம்பட்டினம் துவங்கி சின்ன வீராம்பட்டினம் வரை சாலை முழுதும் கடும் டிராபிக் ஏற்பட்டது.

பல வாகனங்கள் கடற்கரை செல்லாமல் திரும்பி சென்றது. டிராபிக்கில் சிக்கி ஒரு வழியாக ரூ. 100 கட்டணம் செலுத்தி ஈடன் கடற்கரை சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடற்கரையில் காற்று வீசவில்லை என, காரணம் கூறி, காற்றாடி பறக்கவிடப்படவில்லை. கட்டணம் செலுத்தி கடற்கரை சென்ற சுற்றுலா பயணிகள் அதிருப்தியுடன் திரும்பினர்.

மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் காற்றாடி திருவிழாவிற்கு, காலை 10:00 மணிக்கு கடற்கரையை காண வந்த சுற்றுலா பயணிகளிடமும் ரூ. 100 கட்டணம் வசூலித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us