/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணிகள் ஆரோவில்லில் குவிந்தனர்
/
சுற்றுலா பயணிகள் ஆரோவில்லில் குவிந்தனர்
ADDED : ஆக 17, 2024 03:37 AM

வானுார் : தொடர் விடுமுறையையொட்டி, சர்வதேச நகரமான ஆரோவில்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில்,. சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது.
இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அமைதி பூங்காவாக உருவாக்கப்பட்ட ஆரோவில்லில், உருண்டை வடிவிலான மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா, அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையான நேற்றும் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, 'வியூ பாயிண்ட்' பகுதியில் இருந்து பார்வையிட்டனர். மேலும், விசிட்டர் சென்டர், பாரத் நிவாஸ், ஸ்வரம் இசை மையம் போன்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்தனர்.
அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஆரோவில்- இடையஞ்சாவடி சாலை விசிட்டர் சென்டர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.