/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூரிய உதயத்தை காண கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
சூரிய உதயத்தை காண கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சூரிய உதயத்தை காண கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சூரிய உதயத்தை காண கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 10, 2024 07:04 AM

புதுச்சேரி : கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரி வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரம் புதுச்சேரி. மினி கோவா என வர்ணிக்கப்படும் புதுச்சேரிக்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
கனகசெட்டிக்குளம் துவங்கி புதுக்குப்பம் வரை உள்ள 31 கி.மீ., கடற்கரை உள்ளது. இதில், ராக் பீச், பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச், பேரடைஸ் பீச் மிகவும் பிரசித்தி பெற்றது.
அதுவும் பழைய சாராய ஆலையில் இருந்து சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள புரோமனட் கடற்கரை அழகை ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக, காலையில் சூரிய உதயத்தை காண கடற்கரையில் குவிகின்றனர். வாரவிடுமுறையான நேற்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரை பறைகள் மீது அமர்ந்து ரசித்தனர்.