/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சீனியர் எஸ்.பி., அட்வைஸ்

ADDED : செப் 15, 2024 07:10 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு சீனியர் எஸ்.பி. பிரவீன்குமார் திரிபாதி அறிவுரை வழங்கினார்.
புதுச்சேரியில் டிராபிக் சிக்னல்கள் இல்லாத முக்கிய சந்திப்புகளில் போலீசார் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுப்படுகின்றனர்.
போக்குவரத்து போலீசில் தற்போது புதிய கான்ஸ்டபிள்கள் பணிக்கு வந்துள்ளனர்.
புதிய கான்ஸ்டபிள்கள் மற்றும் ஏற்கனவே பணியில் உள்ள கான்ஸ்டபிள்களுக்கு, டிராபிக் சிக்னல்கள் மற்றும் ஹெண்ட் சிக்னல்களை இயக்குவது குறித்து பயிற்சி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
எஸ்.பி. செல்வம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹெண்ட் சிக்னல்களில் உள்ள 10 முறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. சிக்னல்களை திறமையாக கையாண்ட 4 கான்ஸ்டபிள்களுக்கு, ரூ.500 ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறுகையில்; புதுச்சேரியில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த புதிய முறைகள் கையாளப்பட உள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.