/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதி இல்லாத விடுதிகளில் தங்கி எல்லைமீறும் சுற்றுலாப் பயணிகள் உளுளையன்பேட்டையில் முகம் சுளிக்கும் மக்கள்

ADDED : ஜூன் 01, 2024 04:27 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டை பகுதி வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால், பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
புதுச்சேரி மாநிலம் சுற்றுலாத் தளமாக உள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சுற்றுலா வருகின்றனர். அவர்கள், மது குடித்து விட்டு பல சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வார இறுதி நாட்களில் தங்க விடுதி கிடைக்காமல் அலையும் இளைஞர்களை, சிலர் அனுமதி இன்றி குடியிருப்பு பகுதிகளில் தங்களுடைய வீட்டையே விடுதியாக மாற்றி, தங்க அனுமதிக்கின்றனர்.
விடுதி நடத்த ஏராளமான விதிமுறைகள் உள்ளன. புதுச்சேரி அரசிடம் அனுமதி பெற்றால் தான் விடுதிகள் நடத்த முடியும். ஆனால் இது போன்ற சட்ட விரோதமாக ஏராளமான விடுதிகள் இயங்கி வருகின்றன. ஆண்கள், இளம் பெண்கள் தங்குகின்றனர்.
உருளையன்பேட்டை பகுதி, முல்லை நகர், மலர் வீதியில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று வீட்டை வாடகை எடுத்து 25 ஆண், பெண் இரு பாலரையும் தங்க வைத்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் சுற்றி குடியிருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. பெண்கள் ஆண் நண்பர்களுடன் வீதியில் கும்மாளம் அடித்துக் கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி, குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், விடுதி நடத்துபவர்களை அணுகி எப்படி அனுமதி இல்லாமல் நடத்துகிறீர்கள் என, கேட்டனர். அதற்கு விரைவில் அனுமதி பெற்று விடுவோம் என்று கூறி வருகின்றனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விடுதியில் தங்க வைத்த சுற்றுலாப் பயணிகளை காலி செய்ய வைத்தனர்.
மேலும் புதுச்சேரி அரசு இதுபோன்ற அனுமதி இல்லாத விடுதிகளை உடனே கண்டறிந்து தக்க நடவடிக்கை வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.