/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
/
வில்லியனுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
வில்லியனுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
வில்லியனுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
ADDED : மே 10, 2024 11:38 PM

வில்லியனுார்- வில்லியனுார் மாட வீதியில் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகள் மற்றும் விளம்பர பேனர்களை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனுார் நான்கு மாட வீதிகளில் உள்ள சில கடைகளில் பெயர் பலகைகள் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மேலும் கிழக்கு மாட வீதிகளில் மாலை நேரங்களில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சிறு வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். இதனால் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. புகாரின் பேரில் நேற்று காலை சப் கலெக்டர் சோமசேகர அப்பாராவ் கொட்டாரு தலைமையில் தாசில்தார் மணிகண்டன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் குலோத்துங்கன், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவாக மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.
அப்போது ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், விளம்பர பலகைகளை எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்புகளை ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.