பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியால் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்
பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியால் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 29, 2026 11:25 PM

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில். பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி காரணமாக, புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து தற்காலிமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரெட்டியார் மில் அருகே பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. அதையொட்டி, மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று முதல் 5 நாட்களுக்கு வாகன போக்குவரத்து தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலை 8:00 மணியில் இருந்து 10:00 வரையிலும், மாலை 3:00 மணியிலிருந்து 5:00 வரை விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் செல்லலாம்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் இரு சக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையம் செல்லும் அரசு, தனியார் பஸ்கள், கோலியனுார் கூட்ரோடு, ஆழங்கால், பானாம்பட்டு, ஹவுசிங் போர்டு (சவிதா தியேட்டர்), ரயில் நிலையம் வழியாகவோ அல்லது கோலியனுார் கூட்ரோடு, ஆழங்கால், சுந்தரிபாளையம், ஜானகிபுரம் பைபாஸ் புதிய புறவழிசாலையை பயன்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
