/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதித்யா கல்லுாரியில் பயிற்சி முகாம் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பங்கேற்பு
/
ஆதித்யா கல்லுாரியில் பயிற்சி முகாம் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பங்கேற்பு
ஆதித்யா கல்லுாரியில் பயிற்சி முகாம் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பங்கேற்பு
ஆதித்யா கல்லுாரியில் பயிற்சி முகாம் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பங்கேற்பு
ADDED : மே 12, 2024 05:07 AM

புதுச்சேரி: ஆதித்யா ஐ.ஏ.எஸ்., அகாடமியின் கோடைக்கால பயிற்சி முகாமில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர்.
வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள ஆதித்யா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஆதித்யா ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், கோடைக்கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
முகாமில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்வில், ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்யா நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பெரியய்யா பேசியதாவது:
நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமெனில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரியாக வர வேண்டும். அதற்கு அடிப்படையாக, 6ம் வகுப்பில் இருந்தே ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பில் இணைந்து பயிற்சி பெறலாம்.
உலக மக்களை இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் சுவாமி விவேகானந்தர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசை நிலைகளின் முக்கியத்துவத்தையும், உறவு நிலைகளையும், தாய் தந்தை கடமைகள் பற்றியும் உரையாற்றி வியக்க வைத்தவர் விவேகானந்தர்.
இளமை பருவமே கற்றலுக்கு உகந்தது. மாணவர்கள் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும். தனித்துவம் பெற்ற மாணவனாக தன்னை உயர்த்தி கொள்ள வேண்டும்' என்றார்.
வரும் 30ம் தேதி வரை நடக்கும் கோடைக்கால பயிற்சி முகாமில் ஆதித்யா பள்ளி, கல்லுாரி மாணவர்கள், புதுச்சேரியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.