தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தென்னை, வாழை சாகுபடி பயிற்சி

தென்னை, வாழை சாகுபடி பயிற்சி

தென்னை, வாழை சாகுபடி பயிற்சி


ADDED : ஜூன் 28, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2024 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான தென்னை மற்றும் வாழை சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். துணை வேளாண் இயக்குனர் சாந்தி பால்ராஜ் வாழ்த்தி பேசினார்.

காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய நிபுணர் கள் அமலோற்பவநாதன் தென்னை சாகுபடி குறித்தும், சந்திராதரன் வாழை சாகுபடி குறித்தும் விளக்கம் அளித்தனர். வேளாண் அலுவலர் சிவக்குமார் தோட்டக்கலை திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், தங்கதுரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

இதில், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, திருக்கனுார், மணலிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us