/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காய்கறி சாகுபடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

ADDED : ஜூலை 03, 2024 05:53 AM

நெட்டப்பாக்கம், : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டம் சார்பில், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
கரியமாணிக்கம் உழவர் உதவியகத்தில் நடந்த முகாமிற்கு, வேளாண் அலுவலர் திருநாடன் வரவேற்றார்.
பூச்சியியல் வல்லுனர் சிவகுரு காய்கறி பயிர்களில் தாக்குதல் ஏற்படுத்தும் பூச்சிகளின் தன்மை, பாதிப்புகளை கண்டறிதல், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
நோயியல் வல்லுனர் காசிநாதன் காய்கறி பயிர்களில் தாக்குதல் ஏற்படுத்தும் நோய்களின் காரணிகள், அவற்றின் தன்மை, பாதிப்பு அதனை இயந்திர முறையில் கட்டுப்படுத்தும் ராசாய முறை குறித்து விளக்கினார்.
இந்திய உணவு கழக அதிகாரி அருண் நெல் கொள்முதல் செய்யும் முறைகள் குறித்து விளக்கினார்.
முகாமில் நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம, மொளப்பாக்கம், மடுகரை, பண்டசோழநல்லுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை வேளாண் ஊழியர்கள் வெங்கடச்சாலம், ரங்கநாதன், லட்சுமிநாராயணன், இருதயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆத்மா மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.