/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நியாய ஒளி திட்டத்தின் கீழ் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி
/
நியாய ஒளி திட்டத்தின் கீழ் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி
நியாய ஒளி திட்டத்தின் கீழ் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி
நியாய ஒளி திட்டத்தின் கீழ் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி
ADDED : ஜூலை 13, 2024 05:59 AM

புதுச்சேரி: புதிய மூன்று சட்டங்கள் குறித்து பேராசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, மத்திய அரசின் சட்டம் மற் றும் நீதித்துறை அமைச்ச கத்தின் நீதித்துறையின் கீழ் நியாய ஒளி என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. அதன்படி பள்ளி கல்லுாரிகளில் தொடர் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு பெரியகாலாப்பட்டு குளூனி பிரசாந்த் வனத்தில் நடந்தது. சட்ட கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.
மாவட்ட நீதிபதி அம்பிகா, சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, நடந்த சிறப்பு அமர்வுகளில், அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் விஜயன், கவுசலேந்திர பிரதாப் சிங், புதுச்சேரி பல்கலைக்கழக சட்டப் பள்ளி துறை தலைவர் குர்மிந்தர் கவுர் கலந்துரையாடி புதிய சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பல்வேறு கல்வி நிறுவன பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் அடுத்த நிலையில் கல்லுாரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.