/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசில் 414 பேருக்கு இடமாற்ற உத்தரவு ஒரு மணி நேரத்தில் திடீர் நிறுத்தம்
/
போலீசில் 414 பேருக்கு இடமாற்ற உத்தரவு ஒரு மணி நேரத்தில் திடீர் நிறுத்தம்
போலீசில் 414 பேருக்கு இடமாற்ற உத்தரவு ஒரு மணி நேரத்தில் திடீர் நிறுத்தம்
போலீசில் 414 பேருக்கு இடமாற்ற உத்தரவு ஒரு மணி நேரத்தில் திடீர் நிறுத்தம்
ADDED : ஆக 24, 2024 06:21 AM
புதுச்சேரி: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, காவலர்கள் என, 414 பேருக்கு வெளியான இடமாற்றம் உத்தரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
புதுச்சேரி போலீசில் 10 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்இன்ஸ்பெக்டர்கள், 23 உதவி சப்இன்ஸ்பெக்டர்கள், 68 ஏட்டு, காவலர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆணை வெளியானது.
அத்துடன், கடந்த ஆண்டு புதிதாக பணி நியமனம் செய்து பயிற்சி முடித்து ஒராண்டாக ஆயுதப்படையில் உள்ள 293 புதிய காவலர்களுக்கும் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு வெளியானது. போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் இதற்கான 4 ஆணைகளை நேற்று இரவு வெளியிட்டார்.
போலீசார் இடமாற்றம் செய்வதற்கான கோப்பு கடந்த வாரம் டி.ஜி.பி.,யிடம் சென்றது. அதில், அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை இடமாற்றம் செய்வதற்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இடமாற்றல் உத்தரவு இறுதி செய்யப்படவில்லை.
ஆனால் டி.ஜி.பி.,யின் அனுமதி இன்றி நேற்று இரவு அவசர கதியில் இடமாற்றம் உத்தரவு வெளியானது. இடமாற்ற உத்தரவு எந்த அடிப்படையில் வெளியானது என போலீஸ் தலைமையக எஸ்.பி.,க்கு கேள்வி எழுப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர், ஏட்டு, காவலர்கள் என 4 இடமாற்ற உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக போலீஸ் வாட்ஸ்ஆப் குழுக்களில் தலைமையக எஸ்.பி., சார்பில் தகவல் பதிவிடப்பட்டது. இடமாற்ற உத்தரவு வெளியான ஒரு மணி நேரத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.