தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு

டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு

டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு


ADDED : ஜூலை 14, 2024 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர், : கொரவள்ளிமேடு கிராமத்தில் 26 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள புதிய டிரான்ஸ்பார்மரை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.

பாகூர் தொகுதி, கொரவள்ளிமேடு கிராமத்தில் ராஜகவுரி நகர், குறிஞ்சி நகர், நண்பர்கள் நகர், வரதராஜ பெருமாள் நகர் மற்றும் கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டதின் பேரில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, கொரவள்ளிமேடு கிராமத்தில், 26 லட்ச ரூபாய் செலவில், புதியதாக கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது.

இதனை செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us