/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினத்தில் மரங்களுக்கு தீ வைப்பு; தொடரும் சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை

ADDED : செப் 15, 2024 07:09 AM
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மரங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீராம்பட்டினம் - தேங்காய்த்திட்டு துறை அருகே மர்ம நபர்களால் கருவேல மரங்களை ஜே.சி.பி., மூலம் பிடுங்கி நேற்று முன்தினம் இரவு தீ வைத்து எரிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் எரிந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அனைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம், அதே பகுதியில் மாக்ரோவ் மரங்கள், கருவேல மரங்கள் எரிக்கப்பட்டன. அப்பகுதியில் தொடர்ந்து சமூக விரோதமாக செயல்படும் மர்ம கும்பல் மரங்களை தீ வைத்து எரித்து வருகின்றனர்.
தொடர்ந்து மரங்களை தீ வைத்து எரிக்கப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மரங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் தொடர்ந்து மரங்களுக்கு தீ வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வனத்துறை மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.