/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாணிதாசன் நினைவு நாள் தமிழறிஞர்கள் அஞ்சலி
/
வாணிதாசன் நினைவு நாள் தமிழறிஞர்கள் அஞ்சலி
ADDED : ஆக 08, 2024 11:11 PM

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கவிஞர் வாணிதாசனின், 50 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்த்துறைத் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். இயக்குனர் செல்வராஜ் பாராட்டுரை நிகழ்த்தினார்.
வாணிதாசனின், கொள்ளுப்பேத்தி ஆசிரியர் வளர் மதி நினைவு உரையாற்றினார். தொடர்ந்து, கலியபெருமாள் முதுகலைப் பயிலும் தமிழ் மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை வழங்கினார். அவர் தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணகுமார் எழுதிய திருக்குறள் உரை, அன்பின் உரு அருளின் திரு வள்ளலார், கம்பனின் கற்பகத் தமிழ், ஆகிய நுால்களைப் பரிசாக வழங்கினர். வணிகவியல் பேராசிரியர் கற்பகம், முன்னாள் நூலகர் செங்கமலம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.