/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி
/
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி
ADDED : பிப் 15, 2025 05:06 AM
புதுச்சேரி : புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த 14.2.2019ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு ஓய்வு பெற்ற துணை ராணுவ படை நலவாரிய சங்கத்தின் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி முன்னாள் காவல்துறை நலச்சங்க செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி துணை ராணுவ படை நலவாரிய சங்க தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார்.
சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற துணை ராணுவ படை நலவாரிய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ஒருஙகிணைப்பாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

