/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.என்.டி.யூ.சி., தலைவர் நினைவு அஞ்சலி
/
ஐ.என்.டி.யூ.சி., தலைவர் நினைவு அஞ்சலி
ADDED : மே 15, 2024 11:45 PM

புதுச்சேரி: ஐ.என்.டி.யூ.சி., தலைவர் ரவிச்சந்திரன் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 7:30 மணியளவில் புதுச்சேரி முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தில் அமைந்துள்ள அருள்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
காலை 9:00 மணிக்கு மாநில ஐ.என்.டி.யூ.சி., தலைமை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 11:00 மணிக்கு ஐ.என்.டி.யூ.சி., தலைவர் பாலாஜி தலைமையில் நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு உழவர்கரை நகராட்சி அலுவலகம் அருகில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பகல் 12:00 மணிக்கு, உழவர்கரை சாலத் தெருவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சொக்கலிங்கம், மலர்மன்னன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.