/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுார் போலீசார் கொடி அணிவகுப்பு
/
திருக்கனுார் போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 27, 2024 07:28 AM

திருக்கனுார், : லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருக்கனுார் போலீசார் பஜார் வீதியில் நேற்று கொடி அணி வகுப்பு மேற்கொண்டனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலின்போது பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பதை உறுதி செய்யவும், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பிரியா, காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை 5:00மணி அளவில், திருக்கனுார் பஜார் வீதி, வணிகர் வீதி,கூனிச்சம்பட்டு பகுதிகளில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
அப்போது, பஜார் வீதியின் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்தனர்.

