/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு தொல்லை; சிறுவன் கைது
/
சிறுமிக்கு தொல்லை; சிறுவன் கைது
ADDED : மே 29, 2024 05:24 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சிறுமியின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றார். சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்த சிறுவன் அவரது வீட்டிற்கு சென்றார்.
இருவரும் வீட்டில் தனிமையில் இருந்தபோது, சிறுமியின் தாய் திடீரென வீட்டிற்கு வந்துவிட்டார். சிறுவன் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிறுமியின் தாய் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து, சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.